திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா மார்ச் 18-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 18-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி மு.ராமசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 18-ம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து 23-ம் தேதி கைபாரம், 28-ம் தேதி பவுர்ணமி பங்குனி உத்திரம் நடைபெறும்.

30-ம் தேதி இரவு 7.03 மணிக்கு மேல் 9 மணிக்குள் பட்டாபிஷேகம் நடைபெறும். 31-ம் தேதி பகல் 11.30-க்கு மேல் 11.50-க்குள் திருக் கல்யாணம் நடைபெறும்.

ஏப்ரல் 1-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். ஏப்.2-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்