விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி 80 சதவீதமாக வாக்குப்பதிவு உயர்த்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.கண்ணன் தெரிவித்தார்.
சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கட்சியினருக்கு விளக்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது 1,881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரித்து கூடுதலாக 489 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமீறல்களைக் கண்காணிக்க மாவட்டத்தில் 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 21 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு குறைவாக கண்டறியப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இந்த முறை வாக்குப்பதிவை 80 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago