தருமபுரியில் பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ‘ஸ்கோப்’ காட்சிப் படுத்துதல் நிகழ்வு நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘ஸ்கோப்’ என்ற காட்சிப்படுத்துதல் நிகழ்வு திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அந்த வரிசையில், தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான காட்சிப்படுத் துதல் நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, காட்சிப்படுத்துதல் நிகழ்வை தொடங்கி வைத்து பேசியது:
பாடத்தில் உள்ள கருப்பொருளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் திறனை அதிகரிப்பதே ஸ்கோப் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மாணவர்கள் அனைவரும் தங்களின் பாடக் கருப்பொருளை உணர்ந்து கற்றலை உறுதிப்படுத்துதல், 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மாணவர்கள் சேர்ந்து கற்றல், தலைமைப் பொறுப்பு பங்கேற்றல் மற்றும் மேம்படுத்துதல், பாடத்தில் உள்ள கருப்பொருளை அன்றாட வாழ்வில் தொடர்புபடுத்தி மாணவர்களின் அறிவுத்திறனை வளரச் செய்தல், பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு புதிய சிந்தனை, புதிய உத்திகளை பயன்படுத்தி ஆர்வத்தை தூண்டுதல் மற்றும் வளர்த்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதே இந்த திட்டம் ஆகும்.
இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி, அரூர், பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, பொன்முடி, சண்முகவேல், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன், தருமபுரி பள்ளித் துணை ஆய்வர் இளமுருகன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago