தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் தலா 3 பறக்கும் படைக் குழுக்கள் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டத்தின் எல்லைகளில் 9 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தேர்தல் பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் திறக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, தேர்தல் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கலாம்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தனிநபர் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். இல்லையென்றால், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல, ஒவ் வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைக் குழுக்கள் வீதம் 8 தொகுதிகளுக்கும் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலையான கண் காணிப் புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே 2,291 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 1,050 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்த 595 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, மொத்தம் 2,886 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள் ளன. இவற்றில் 102 வாக்குச்சாவ டிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு வாக்குப் பதிவு அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படும்.
மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிமரங்கள், பேனர்களை இன்றுக்குள்(பிப்.28) அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் 14 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார். அப்போது, காவல் கண்காணிப்பாளர் தேஷ் முக் சேகர் சஞ்சய் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago