தினக் கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய(பஜன்கோவா) ஊழி யர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் செருமாவிலங்கையில் நேற்று நடைபெற்றது. காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொருளாளர் மயில்வாகனன், அலுவலக செயலாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சங்கத்தின் புதிய தலைவராக ஜி.மருதமுத்து, பொதுச் செயலாளராக பி.ஜீவானந்தன், பொருளாளராக ஏ.ராஜேந்திரன், துணைத் தலைவராக எம்.கஸ்பர் உள் ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

கூட்டத்தில், வேளாண் கல்லூரியில் நீண்டகாலமாக ஒரே பதவியில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை, காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கும் வகையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்