மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மாதிரிவேளூர் கிராமத்தில், விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கச் செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. சங்க ஆலோசகர் தங்க திருஞானம் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் தனலட்சுமி ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாதிரிவேளூரில் கிராம நிர்வாக அலுவலராக(விஏஓ) பணியாற்றி வரும் மணிவேல், 150 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல், நிலம் இல்லாதவர்களுக்கும், வெளியூரில் வசிப்பவர்களுக்கும் போலிச் சான்று மூலம் நிவாரணம் வழங்கி மோசடி செய்துள்ளார்.
இந்த வகையில் ரூ.15 லட்சம் நிவாரண மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், ராஜதுரை நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago