தமிழகம் முழுவதும் மார்ச் 11-ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா இந்து மக்கள் கட்சி சார்பில் அனைத்து சிவன் கோயில்களிலும் இந்து விழிப்புணர்வு திருவிழாவாகவும், மழை பொழிய, வறட்சி நீங்க வேண்டி பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சியாகவும் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிவராத்திரி அன்று இரவு கண் விழித்து, விரதமிருந்து, இந்து ஒற்றுமைக்காக 9 சிவன் கோயில்களில் விளக்கேற்றி தரிசனம் செய்து, யாத்திரையாக சிவஜோதி ஏந்திச் சென்று, பிராத்தனை செய்யப்பட உள்ளது. இதன் நிறைவாக, தேவார- திருமுறைகளை பாராயணம் செய்து, இந்து ஒற்றுமை மாநாடு, இந்து சமய பிரச்சார கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
மேலும், இந்த மகா சிவராத்திரியை இந்துக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago