நாகை மாவட்டம் நாகூர் ரயில் நிலையத்தில், முதலாவது நடைமேடை சமமற்ற நிலையில், விரிசல் ஏற்பட்டு பள்ளமாக உள்ளது. இதனால், ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ரயிலில் ஏற வரும்போது தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, ரயில் பயணிகளின் நலன் கருதி முதலாவது நடைமேடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நாகூர்- நாகப்பட்டினம் நலச் சங்கத் தலைவர் நாகூர் சித்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago