அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள 11 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு, கடந்த 9.2.2021-ன்படி பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மார்ச் 1-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக(வளர்ச்சி) பிரிவில் நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், இந்த நேர்காணல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்