செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அன்பு முற்றம்’ என்ற மனநல மையத்தை, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் திறந்துவைத்தார். ஆட்சியர் கூறியதாவது:
மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை மீட்டு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிப்பதற்காக, தொண்டு நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த மனநல மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது வெளியில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை அனுமதியுடன், தொண்டு நிறுவனம் மூலம் மீட்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு மனநல சிகிச்சை அளித்து குணப்படுத்தி, வாழ்க்கைத் திறன் பயிற்சியும் அளிக்கப்படும். சிகிச்சையின் முடிவில் அவர்கள் தெரிவிக்கும் விவரங்களை ஆராய்ந்து, அவர்களை குடும்பத்தினருடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், மனநல மருத்துவர்கள் நிர்மல், ஜின்னா, பேனியன் மிருணாளினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago