ராமானுஜர் நூற்றாண்டு விழாவின்போது ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட ராமானுஜர் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
ராமானுஜரின் ஆயிரமாவதுஆண்டு விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரும்புதூரில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் 3 ஏக்கர் பரப்பளவில் மணி மண்டபம், வேதபாடசாலை, அன்னதானகூடம், தங்கும் விடுதி, கழிப்பறைகள், திருக்குளம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து மணிமண்டபம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து ராமானுஜர் மணிமண்ட பத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் திறந்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையர் லட்சுமணன் குத்துவிளக்கேற்றி ராமானுஜர் படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago