பாம்பனில் புதிய ரயில் பாலம் பணி டிசம்பருக்குள் முடியும்? தென்னக ரயில்வே பொறியாளர் தகவல்

By செய்திப்பிரிவு

பாம்பனில் புதிய ரயில் பாலப் பணிகள் வருகிற டிசம்பருக்குள் நிறைவடையும் வாய்ப்புள்ளதாக தெற்கு ரயில்வே பாலங்களின் முதன்மைப் பொறியாளர் சுமீட் சிங்கால் தெரிவித்தார்.

ராமேசுவரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகளை தென்னக ரயில்வே பாலங்களின் முதன்மைப் பொறியாளர் சுமீட் சிங்கால் நேற்று பார்வையிட்டார். மேலும் தற்போதைய பாலத்தின் உறுதித் தன்மை குறித்தும், இரும்பு கர் டர்கள், துாண்களையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போதைய பாம்பன் ரயில் பாலம் உறுதியுடன் உள்ளது. இதை ஐ.ஐ.டி. பொறியாளர் குழுவினர் சென்சார் கருவி மூலம் கண்காணித்து வருகின்றனர். புதிய பாலத்தின் பணிகள் 2021 டிசம்பர் இறுதிக் குள் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்