வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் பட்டாசு ஆலை நலக்குழு கூட்டம்

By செய்திப்பிரிவு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் கே‌.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நலக்குழு கூட்டம் நடைபெற்றது.

சாத்தூர் அருகே அச்சங் குளத்தில் கடந்த 12 ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே‌.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடனான நல குழுக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் பேசுகையில், பட்டாசு ஆலைகளில் விதிமீறல் காரணமாகவே விபத்துகள் ஏற்படுகின்றன என்றார்.

அதைத்தொடர்ந்து கூட்ட அரங் கில் இருந்து பத்திரிகையாளர்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.

அதையடுத்து பத்தி ரிகையாளர்களும் வெளி யேற்றப்பட்டனர். இதனால் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கூற வந்த பட்டாசு ஆலை நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்