தேர்தலுக்காகவே காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் சு.திருநாவுக்கரசர் எம்.பி கருத்து

By செய்திப்பிரிவு

ஆட்சியின் தொடக்கத்திலேயே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்காமல், ஆட்சி முடியும் தருவாயில் அடிக்கல் நாட்டியது தேர்தலில் வாக்கு பெறுவதற்காகத்தான் என எம்.பி சு.திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை மிக்க புதுச்சேரி அரசை, உட்கட்சி பிரச்சினையை பயன்படுத்தி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, மத்திய பாஜக அரசு கவிழ்த்துள்ளது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை. இது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யோசனையோடுதான் நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவிரி- வைகை குண்டாறு திட்டத்தை செயல்படுத்துவதற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தத் திட்டம் உபரி நீரை வெளியேற்றும் திட்டம்தான். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக எம்பிக்கள் குரல் கொடுப்போம்.

ஆட்சியின் தொடக்கத்திலேயே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்காமல், ஆட்சி முடியும் தருவாயில் அடிக்கல் நாட்டியது தேர்தலில் வாக்கு பெறுவதற்காகத் தான் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்