திருவாரூர்-திருத்துறைப் பூண்டி சாலையில் கூடூரில் இருந்து கூத்தங்குடி செல்லும் சாலையில் ரயில்வே கீழ்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கூடூர், அன்னூர் போன்ற ஊர்களில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மாணவர்கள் சென்று வரும் வழக்கமான சாலையை அகற்றி விட்டு, காட்டாற்று ஓரமாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தில் மழைக் காலங்களில் ஆற்றில் எந்த அளவு நீர் செல்கிறதோ அதே அளவுக்கு பாலத்திலும் நீர் தேங்கியது. இதன்காரணமாக கடந்த 6 மாத காலமாக இந்த பாலத்தை மக்களால் பயன்படுத்த முடியவில்லை.
எனவே, இங்குள்ள ரயில்வே கீழ்பாலத்தை அகற்ற வேண்டும். ஏற்கெனவே இருந்தது போன்று சாலை வழியாகவே தண்டவாளத்தை கடக்கும் வகையில் புதிய சாலை அமைக்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிகாரி கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு, கூடூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago