திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூன்றாம்சேத்தி ஊராட்சி கருவக்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணி, இளைஞர் மன்ற மாவட்டச் செயலாளர் துரை.அருள்ராஜன், ஊராட்சித் தலைவர்கள் சாந்தி, ராஜேஸ்வரி பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தகவலறிந்து வந்த மன்னார்குடி வட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, கருவக்குளத்தில் நாளை (பிப்.22) நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago