புதிய மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் நியமனம் எப்போது? பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ.கள்

By என்.சன்னாசி

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங் களில் காவல் ஆய்வாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்களா என்று பதவி உயர்வுக்காகக் காத் திருக்கும் எஸ்.ஐ.கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மதுரை- கோச்சடை, அனுப்பானடி, விழுப்புரம்-மேல்மலையனூர், திருவாரூரில் அம்மையப்பன், தருமபுரியில் காரிமங்கலம், மாட் லம்பட்டி, கள்ளக்குறிச்சியில் கள மருதூர், திருவெண்ணைநல்லூர், வானகரம், திருமுடிவாக்கம், அரசூர், பெரம்பலூரில் அம்மா பாளையம், கரூரில் தாந்தோணி மற்றும் 10 புறக்காவல் நிலை யங்களை முழு நேரக் காவல் நிலையங்களாக மாற்றுதல் என 28 புதிய காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டன.

இதுதவிர எஸ்.ஐ.கள் நிர் வாகத்தில் உள்ள 7 காவல் நிலையங்கள் ஆய்வாளர் அந் தஸ்தில் செயல்படும் என்றும், 6 மாநகராட்சியிலும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவில் 53 ஆய்வாளர் பணியிடம் உரு வாக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

இதன்படி செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி உள் ளிட்ட 7 புதிய மாவட்டங்களில் காவல் துறையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனப் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் எஸ்.ஐ.கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங் களில் மட்டும் காலியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் உள்ள 5 புதிய மாவட்டங்களிலும் காலி யிடங்களை நிரப்ப வேண்டும் என நேரடியாகப் பணியில் சேர்ந்த எஸ்.ஐ.கள் மற்றும் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் காவல் துறையினர் வலியுறுத் தினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: 2008-ல் நேரடி எஸ்.ஐ.களாகத் தேர்வாகி, தற்போது தாலுகா காவல் நிலையங்களில் சுமார் 443 பேர் பணிபுரிகின்றனர். 2018-ல் தேர்வு நிலை ஆய்வாளர்களாகத் தேர் வாகி 3 ஆண்டுகளாக ஆய் வாளர் ஊதியம் பெற்றாலும், எங் களுடன் பணிபுரிந்த 150-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களுக்கு மட்டும் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 7 புதிய மாவட்டங்களுக்கான 100 ஆய்வாளர் பணியிடங்கள், சைபர் கிரைமில் 47 ஆய்வாளர் பணியிடம், ஆய்வாளர் அந் தஸ்தில் தரம் உயர்த்தப்பட்ட காவல் நிலையங்களுக்கான 70 ஆய்வாளர்கள், 28 புதிய காவல் நிலையங்களுக்கான காலியிடம் மற்றும் ஏற்கெனவே உள்ள ஆய் வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்