பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்குத்தான் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் மத்திய பட்ஜெட் விளக்கம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. பாஜக மாவட்டத்தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நரேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, செய்தியாளர்களிடம் கூறும் போது, "கடந்த ஆண்டு கரோனா வால் உலகமே முடங்கியது. இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள் ளது. விவசாயம், உட்கட்டமைப்பு, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந் துள்ளது.
இதை, புரிந்துக்கொள்ளாத எதிர்கட்சிகள், மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சில வியாபாரிகள் வெளி நாட்டு தூண்டுதலின் பேரில் புதுடெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசியக்கொடியை அவமதித்ததைக் கூட ராகுலும், மு.க. ஸ்டாலினும் நியா யப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு விதிக்கும் வரிதான் மிகப்பெரிய காரணம். மத்திய அரசு 13 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது. இதை ஜிஎஸ்டி யில் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிக்கொடுப்பதை மட்டுமே பேசி வருகிறார். பொய்யான தகவல் களை அவர் ஒவ்வொரு கூட்டத் திலும் பேசி வருவது மக்களுக்கு புரிய தொடங்கியுள் ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு வெளி நாடுகளிடமிருந்தும் கடன் பெற வில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தி கொலையில் தொடர் புடைய 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக் குத்தான் உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்.
அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக போட்டியிடும். அது எந்தத் தொகுதி என பின்னர் அறிவிக்கப் படும். பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற பெரிய குடும்பத்தினர் மட்டுமே வளர்ச்சி பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அவர்களை வளர்த்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான்’’ என்றார்.
நிகழ்ச்சியில், பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago