பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு ரூ.5.11 கோடியில் சாலை அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நிர்வாக அனுமதி அளித்து உத்தர விடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட மலை கிராமமான பீஞ்சமந்தைஉள்ளிட்ட 28 கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் வசிக் கின்றனர். இவர்களுக்கு, முத்துக்குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை வரை சுமார் 6.5 கி.மீ தொலைவு சாலை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
இதற்கிடையில், மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழங்குடியினர் திட்டங்களின் மூலம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2021-22 நிதி யாண்டில் ரூ.5.11 கோடியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடுக்கான நிர்வாகஅனுமதி வழங்கி கூடுதல் தலைமை செயலாளர் ஓட்டெம் டாய் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago