ஆரணியில் குடியிருப்புப் பகுதியில்குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதை கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் வந்தவாசி சாலையில் உள்ள மில்லர்ஸ் சாலை குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டு வரு கிறது. மேலும், குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து எரிப்பதால், சுவாசப் பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு குப்பைகள் கொட்டவும், எரிக்கவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குப்பைகளுக்கு நேற்று சிலர் மீண்டும் தீ வைத்து எரித்ததால், குடியிருப்புப் பகுதி களை புகை மண்டலம் சூழ்ந்தது. கண் எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆரணி – வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, "குடியிருப்புப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றத்தை சுவாசித்து வாழ்கிறோம். மேலும், குப்பைகள் அதிகளவில் சேர்ந்தால், அதனை தீயிட்டு கொளுத்துவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவ்வாறு தீயிட்டு கொளுத் தும்போது வெளியேறும் நச்சுப் புகையால் கண் எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் வயதான வர்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை கொட்ட வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும் அலட்சிய மாக உள்ளனர். குடியிருப்புப் பகுதி அருகே குப்பைகளை கொட்டக்கூடாது" என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago