சிவகங்கை அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் நேற்று முன்தினம் மாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீ ஸார் கைதுசெய்துள்ளனர்.
சிவகங்கையை அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (60). அதிமுக பிரமுகரான இவர், மாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இவரது மூத்த மருமகள், தற்போது ஊராட்சித் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மகன்கள் வயலுக்குச் சென்றனர். அங்கு அவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். உடனடியாக திருப்பாச்சேத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் தலைமையில் ஏடிஎஸ்பி முரளி தரன், மானாமதுரை டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் ஆகியோர் பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.
அவரது மூத்த மகன் மணிமுத்து அளித்த புகாரில் திருப்பாச்சேத்தி போலீஸார் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், தேர் தல் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக படமாத்தூர் வேலாங்குளத்தைச் சேர்ந்த முத்துமாரி மகன் செந்தில்முருகன் (31), கருப்புச்சாமி மகன் சூர்யா (28), மாத்தூரைச் சேர்ந்த அன்பரசன் (39), கதிர்வேலு (29), தேவராஜன் (65) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான 3 பேரைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago