மு.க.ஸ்டாலின் இன்று பரமக்குடி வருகை

By செய்திப்பிரிவு

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பிலான பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பரமக் குடியில் மேற்கொள்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை இன்று பரமக்குடியில் தொடங்குகிறார். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூாில் நான்கு வழிச் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு ஸ்டாலின் இன்று பகல் 1 மணிக்கு வருகிறார். அங்கு பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடி, குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெறு கிறார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்காக மதுரையிலிருந்து காரில் வரும் ஸ்டாலினுக்கு பார்த்திபனூரில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்