நாமக்கல் - பரமத்தி சாலையில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் பிப்ரவரி 1-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட உள்ளது, என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மின்பகிர்மான வட்டம் வளையப்பட்டி மின் உபகோட்டத்துக்கு உள்பட்ட மின்வாரிய அலுவலகம் நாமக்கல் - பரமத்தி சாலையில் துணை மின் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இந்த அலுவலகம் கொண்டிச் செட்டிப்பட்டி காளியம்மன் கோயிலில் இருந்து சிங்கிலிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்துக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
மின் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நாமக்கல் இ.பி.காலனி, போதுப்பட்டி, காவேட்டிப்பட்டி, பி.கே.பாளையம், அண்ணாநகர், கொண்டிச்செட்டிப்பட்டி, மதுரைவீரன்புதூர், எர்ணாபுரம், கிருஷ்ணாபுரம், கருப்பட்டிப் பாளையம், பெரியப்பட்டி, சிங்கிலிப்பட்டி, தொட்டிப்பட்டி, தும்மங்குறிச்சி, கே.சி. பட்டி, ஹவுசிங் போர்டு, மணியாரம்புதூர், டி.எஸ்.பி. அலுவலக காவலர் குடியிருப்பு, மகரிஷி நகர், செல்வகணபதி நகர் ஆகிய பகுதி மக்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கொண்டிச்செட்டிப்பட்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago