தைப்பட்டத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தைப்பட்டத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க விரும்பு வோருக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள், தென்னை நார்கட்டி, தோட்டத்திற்கு தேவையான சொட்டு நீர் பாசன உபகரணங்கள், உயிர் உரங்கள், மண்வெட்டி, ஸ்பிரேயர், குழி தட்டுகள், சிகோசர் ஆகிய வற்றை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பான தகவல் களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஈரோடு (94455-12170), மொடக்குறிச்சி (96266-62333), கொடுமுடி (9600569830), பவானி (99409-43079), அம்மாபேட்டை (97507-51385), அந்தியூர் (94427-55132), பெருந்துறை (97906-11101), சென்னிமலை (97870-45557), கோபி (93621-19780), டி.என்.பாளையம் (80721-02951) நம்பியூர் (94867-94383), சத்தியமங்கலம் (90959-50500) பவானிசாகர் (98427-28398), தாளவாடி (96886-75883). ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago