கிராமங்களில் மேற்கொள்ளப்படும் எந்தத் திட்டம் பற்றியும் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவிப்பதில்லை என விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
விருதுநகரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலை வர் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்மோகன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொறி யாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் பேசியதாவது: ஊராட்சிப் பகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் நடக்கும் எந்த பணிகள் குறித்தும் பொறியாளர்களோ, அதிகாரிகளோ அந்தந்தப் பகுதி கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. என்ன பணி எந்தத் திட்டத்தில் நடக்கிறது என பொதுமக்கள் கேட்டால் எங்களால் பதில் கூற முடியவில்லை.
செங்குன்றாபுரம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது. 3 அடி பள்ளம் தோண்டி பதிக்கப்பட வேண்டிய குழாய் ஒன்றரை அடி பள்ளம் தோண்டி பதிக்கப்படுகிறது. குழாயும் தரமில்லாமல் உள்ளது. இதுபற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒன்றியக்குழு நிதி அனைத்தும் முறையாக 23 வார்டுகளுக்கும் பிரித்துக் கொடுத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தலைவருக்கு 25 சதவிகிதம், துணைத் தலைவருக்கு 20 சதவிகிதம் என்று நிதியைப் பிரிக்கக் கூடாது. தலைவர், துணைத் தலை வரின் வார்டுகளுக்கு மற்ற வார்டு களைவிட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தால் அந்தத் தீர்மானத்தில் நாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago