மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தொழுநோய் பற்றிய அச்சத்தையும் அறியாமையையும் போக்கும் விதமாக ‘ஸ்பர்ஸ்’ தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் தீண்டைாமை ஒழிப்பு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும், தொழுநோயாளிகளுக்கு ஊன்றுகோல்களையும் காலணி களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், துணை இயக்குநர் (தொழுநோய்) பிரீத்தா, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) வில்சன் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப் பத்தூர் மாவட்டத்தில் தற்போது வரை 25 பேர் தொழுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2020-21ஆம் ஆண்டில் புதிதாக 33 தொழுநோயாளிகள் கண்டறி யப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வள்ளி, ஆட்சியர் அலுவலக மேலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்