திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே மொண்டிபாளையத்தில் ‘மேல் திருப்பதி’ எனப் போற்றப்படும் தேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தைதேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு தேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம்நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா’ முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலை 3 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. சேவூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று (ஜன.28) பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நாளை (ஜன.29) காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளன. சனிக்கிழமை மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைய உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago