வருவாய்த் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது உட்பட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில்நேற்று மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்டோர் தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங் கள் மற்றும் இதர வருவாய்த் துறை அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை மாவட்டம் முழுவதும் நேற்று 250-க்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட நபர்களின்பணியினை வரன்முறை செய்யும்அதிகாரத்தை ஆட்சியர்களுக்கு வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், பதிவறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் பிப். 6-ம் தேதி சேலத்தில் கோரிக்கை மாநாடும், பிப்.17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றனர். ஊழியர்களின் போராட்டத்தால், அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago