விழுப்புரத்தில் ரூ.34 லட்சத்தில் ஏரிகள் சீரமைப்பு அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் ரூ.34 லட்சத்தில் 4 ஏரிகள் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வி.மருதூர் ஏரி ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், சாலாமேடு- பொன்னேரி ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டிலும், பானாம்பட்டு ஏரி ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், அய்யனார் ஏரி ரூ.9.5 லட்சம் மதிப்பீட்டிலும் எனமொத்தம் ரூ.34 லட்சம் மதிப்பீட் டில் ஏரிகள் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்றுகொடியசைத்து துவக்கி வைத் தார்.

இதனை தொடர்ந்து திருப்பாச்சனூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.71.55 லட்சம் மதிப்பீட்டில் நரிஓடை கீழ்மட்டத் தரைப்பாலம் அமைக்கும் பணி யினை தொடங்கி வைத்தார். ரூ.41.63 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளப்பாதுகாப்பு தடுப்புச் சுவர்அமைக்கும் பணி மற்றும் ரூ.7.32 லட்சம் மதிப்பீட்டில் இணைப் புச்சாலை அமைக்கும் பணி எனமொத்தம் ரூ.1. 20 கோடி மதிப்பீட் டில் பணிகளை தொடங்கி வைத் தார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த அஜித்குமார் அண்மையில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியி லிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், திட்ட இயக்குநர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், சுரங்கத்துறை துணை இயக்குநர் லட்சுமிப்ரியா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியா ளர் ராஜா, உதவி செயற்பொறியா ளர்கள் அன்பரசு, ஞானசேகர், வித்தேஸ்வர், கனகராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்