பயிர் நிவாரணம் வழங்கியதில் குளறுபடி நடைபெற் றதாக திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டனர்.
திட்டக்குடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல கிராமங்களில் மக்காச்சோளம் சேதமடைந்தது. இதற்கு நிவாரணம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக வெலிங்டன் பாசன பகுதியைச் சேர்ந்த 15 கிராமங்களுக்கு மட்டும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் சிறுமுளை கிராமத்தில் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் சிலரது மனுவை திட்டமிட்டு நிராகரித்ததாக புகார் தெரிவித்து, நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் அக்கட்சியினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் வட்டாட்சியர் சையதுஅபுதாகீர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர் . இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago