ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இனிய தமிழ் சங்கம் சார்பாக சமத்துவப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாத்திமா சின்னத்துரை, ராஜாத்தி அப்துல்லா, பாத்திமா சானாஸ், ஆயிசத்துல் நசீதா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் எம்.பெரியசாமி வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் சங்க உறுப்பினர் பேராசிரியை தேன்மொழி பாலகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago