தடை விதிக்கப்பட்ட குவாரியில் இருந்து கற்களை எடுத்துச் சென்ற லாரி சிறைபிடிப்பு

By செய்திப்பிரிவு

கோபி அருகே தடைசெய்யப்பட்ட கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றிச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து, வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடுமாவட்டம் கோபியை அடுத்த கலிங்கியம் பகுதியில் நாகராஜ் என்பருக்கு சொந்தமான கல்குவாரி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்தது. இக்கல்குவாரியினால் நிலத்தடி நீர் மட்டம்பாதிக்கப்படுவதாகவும், குவாரியில் வைக்கப்படும் வெடிகளால், அருகாமையில் உள்ள வீடுகள் சேதமடைவதாகவும் புகார் எழுந்தது.

இது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்ததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கல்குவாரியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறையினர் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து குவாரி செயல்பட தடைவிதித்தனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள கல்குவாரியிலிருந்தும், லாரியின் மூலம் கருங்கற்கள் வெட்டியெடுத்து கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து லாரியைச் சிறைபிடித்த மக்கள், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வருவாய்த்துறையினர் லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்