வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்கள், வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம் உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வரு வதாகவும், அதை கட்டுப்படுத்த சத்துவாச்சாரி காவல் துறை யினர் முயற்சி எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய் வாளர் உட்பட அனை வரையும் வேறு காவல் நிலையங்களுக்கு பணி யிட மாற்றம் செய்ய வேண் டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில், சத்துவாச்சாரி பகுதியில் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனி, காட்பாடி காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல, ஏட்டுக் கள் மோகன் பள்ளிகொண் டாவுக்கும், சந்திரசேகரன் லத்தேரி காவல் நிலை யத்தும், காவலர் வெங்க டேசன் வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல, எஸ்பி அலுவல கத்தில் பணியாற்றி வந்த ஏட்டு அருண்குமார் பரதராமிக்கும், வேலூர் போக்குவரத்து காவலர் அன்பழகன் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செல்வகுமார் உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago