வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாவுக்கு ரூ.10 கோடி மதிப்புக்கு காப்பீட்டு பிரீமியம் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன் னிட்டு எருது விடும் திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழா நடத்த ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த 13 நிலையான கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட் டத்தில் எருதுவிடும் விழாக்களை வரும் 14-ஆம் தேதி முதல் பிப்ர வரி 28-ஆம் தேதி வரை மட்டும் நடத்த வேண்டும். விழாக்கள் காலை 10 மணி முதல் பகல் 2 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். விழா குழுவினர் முன்னெச்சரிக்கை காப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியர் பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
எருதுவிடும் விழா நாளான்று ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்ய பிரீமியத் தொகையாக ரூ.11,840-ம் எருதுகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டு பிரீமியத்துக்கு ரூ.3,611 தொகையாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் மனித உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம், எருது களுக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும். இதற்கான காப்பீட்டு பிரீமியத்தை மத்திய அரசின் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஜம்பு பாலா காம்ப்ளக்ஸ் முதல் தளம், ஆற்காடு சாலை, வேலூர் என்ற முகவரியில் அணுகலாம். இது தொடர்பாக காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் ஜெய பால் என்பவரை 0416-226651 அல்லது 9444652640 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
காளையின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் 4 நபர்கள் கண்டிப்பாக கரோனா இல்லை என்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே அடையாள அட்டை வழங்கப்படும். பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். எருது விடும் விழா முழுவதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 13 விதிமுறைகள் வெளி யிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago