வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 66.1 மி.மீ மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையின் காரணமாக நகர் மற்றும் கிராமப் புறங்களில் தாழ்வான இடங்கள், வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து லேசான வெயில் அடித்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.
மேலும், கடல் கொந்தளிப்புடன் இருந்ததால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தொடர் மழை எதிரொலியால் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago