விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்படவில்லை. 10-ம் வகுப்புமற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொங்கல் விடுமுறைக்கு பிறகு திறக்கலாமா என்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனையடுத்து, கடந்த இரு நாட்களாக பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 238 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 31 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 84 தனியார் பள்ளிகள், 18 சிபிஎஸ்சி பள்ளிகள், 8 சுயநிதிப்பள்ளிகள் என 191 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 194 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுவருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் களிடம் கேட்டபோது: நேற்று பங்கேற்ற மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பொங்கலுக்கு பின் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கும்போது பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி யுள்ளது. எனவே பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பது உறுதி" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்