திமுக ஆட்சியின்போது பணி நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், கடந்த 2011-ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் பணியமர்த்தகோரி மக்கள் நலப்பணியாளர்கள் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மீண்டும் பணி வழங்கக்கோரி நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் நல்.செல்லப்பாண்டியன் தலைமையில் நேற்று ரத்தம் விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் போலீஸார் சாலைமறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து மாலை விடுவித்தனர்.
மீண்டும் பணியமர்த்தகோரி மக்கள் நலப்பணியாளர்கள் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago