செஞ்சி அருகே மழையால் பயிர்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே தளவானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

கல்லாலிப்பட்டு, குன்னத்தூர், மேல் கூடலூர், வவ்வால்குன்றம், தளவானூர்,வில்லமாதேவி ஆகிய கிராமங்களில் புயலாலும், கன மழையாலும் பயிர்கள் நீரில் மூழ்கி மக்கும் நிலையில் உள்ளது. வேளாண்மை அதிகாரிகள் யாரும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ. 20 ஆயிரம், உளுந்து, காராமணி, மணிலா, எள் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் சாகுபடி செலவாகியுள்ளது. எனவே ஆட்சியர் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்