கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை அருகேயுள்ள செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மெய்நிகர் வகுப்பறையை, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, "சர்வதேச அளவில் கல்வியில் முன்னோடியாகத் திகழும் ஃபின்லாந்து நாட்டின் கல்வி முறையில், மெய்நிகர் கற்பித்தல் முறையும் ஒன்றாகும். இந்தக் கல்வி முறையை அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்துள்ளது பாராட்டுக்குரியது. இதன் மூலம் இங்கு பயிலும் மாணவர்கள், உயர் தொழில்நுட்பத்துடன் கல்வி கற்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இதில் பாடம் சார்ந்த ஒளிப்பதிவுகள், பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, 3-டி வடிவில் காட்சிப்படுத்தப்படும்.
இதை நல்ல முறையில் பயன்படுத்தி, மாணவர்கள் அறிவுத் திறனை பெருக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த விழாவில், சூலூர் எம்எல்ஏ வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago