கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட்டில் நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை,தொழிலாளர்களை விரட்டியது. இதில் கால் தவறி விழுந்த ஜெயமணியை(56) யானை மிதித்துக் கொன்றது. வனத் துறையினர் ஜெயமணியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். மேலும், அவரது குடும்பத்துக்கு வனத் துறை சார்பில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கினர். இதேபோல, வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு சார்பில், ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. "வால்பாறையில் யானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதிக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க வேண்டாம் என்று ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளோம்" என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago