சித்த மருத்துவ தின விழிப்புணர்வு கண்காட்சி

By செய்திப்பிரிவு

சித்த மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் அகஸ்தியர் பிறந்த நாள், தேசிய சித்த மருத்துவ தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 4-வது சித்த மருத்துவ தினம் நாளை (ஜன. 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநரகம், கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, இலவச சித்த மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள், 200 மருந்து மூலப் பொருட்கள் இடம்பெற்றன. மேலும், கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு, கரோனா தடுப்பு முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சி.தனம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்