மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2018-19-ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்க கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலம் ஜன. 2, 3 ஆகிய இரு நாட்கள் காலை 8 மணியளவில் தல்லாகுளம் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பட்டியலின்படி வரிசை எண் 1 முதல் 400 வரை ஜன.2-ம் தேதி, 401 முதல் 742 வரை ஜன.3-ம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, உரிய அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago