பாசன நீர் தொடர்பான பேச்சுவார்த்தையில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பங்கேற்க வேண்டும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பேச்சுவார்த்தைக்கு பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வர வேண்டும் என்று சிவகங்கா மாவட்ட பெரியாறு பாசன விவ சாயிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

வைகை அணையில் இருந்து கடந்த செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்துக்கு தண் ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்துக்கு முறை யாக தண்ணீர் திறக்காததால் விவ சாயிகள் அதிருப்தி அடைந்தனர்.இதைக் கண்டித்து ஜன.7-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித் தனர்.

இதையடுத்து, சிவகங்கையில் கோட்டாட்சியர் முத்துகழுவன் தலைமையில் சமாதானக் கூட் டம் நேற்று நடந்தது. இதில், பேச்சுவார்த்தைக்கு பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் வந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கூட்டத்துக்குப் பின் ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங் கிணைப் பாளர்கள் முத்துராம லிங்கம், அன்வர், அய்யனார் ஆகியோர் கூறுகையில், முத் தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தைக் கைவிடுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண் டனர். பேச்சுவார்த்தைக் கூட் டத்துக்கு பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வர வேண்டும். தண்ணீர் பெறு வதில் எங்களுக்குரிய உரிமை குறித்து எழுத்துபூர்வமாக அவர் உறுதியளிக்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி ஜன.7-ம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்