புத்தாண்டையொட்டி மதுரையில் ஜாலி பைக், கார் ரெய்டு, கூட்டம் கூடுவது ஆகியவற்றைத் தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை யில் நேற்று நள்ளிரவில் தேவலாயங்கள், கோயில்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். பைக், கார் ஜாலி ரெய்டு களில் ஈடுபடுவோரைக் கண்டறி யும் வகையில் முக்கிய சாலைகள் கண்காணிக்கப்பட்டன.
தடையை மீறியோரின் வாகனங் களைப் பறிமுதல் செய் யவும் போலீஸாருக்கு உத்தரவிட் டிருந்தனர். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி, சந்திப்பு பகுதியிலும் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
ரயில், பேருந்து நிலை யங்களிலும் போலீஸார் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. துணை ஆணையர்கள் பழனிக் குமார், சிவபிரசாத், உதவி ஆணையர்கள் தலைமையில் போலீஸார் விடிய விடிய ரோந்து சென்றனர்.
விபத்தில்லா புத்தாண்டு மதுரை என்ற திட்டத்தை முன்னிறுத்தி மாவட்டம் முழுவதும் போலீஸார் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். நகர், மாவட்டம் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago