திண்டுக்கல்லில் இறந்த பெண் போலீஸ்காரர் மீண்டும் உயிர்த் தெழுவார் என்ற நம்பிக்கை யில் காத்திருந்த அவரது அக்காளிட மிருந்து உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் அருகே நந்த வனம்பட்டி டிரசரி காலனியை சேர்ந்த பால்ராஜ் மனைவி அன்னை இந்திரா(38). இவர், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணிபுரிந்து வந்தார். . க்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடால் சில ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனியே வசித்தனர்.
இந்நிலையில் அன்னை இந்திராவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அக்.16 முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார்.டிச. 25-ல் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் நேற்று வரைப் பணிக்கு வரவில்லை. இதனால், அன்னைஇந்திராவின் நிலை குறித்து அறிந்துவர இரண்டு பெண் போலீஸாரை அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
வீட்டின் உள்பக்கக் கதவு பூட்டி யிருந்தநிலையில், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்து அங்கு சென்ற பெண் போலீஸார், அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத் தனர். தாடிக் கொம்பு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசா ரணை நடத்தினர். வீட்டினுள் பார்த்த போது அன்னைஇந்திராவின் உடல் அழுகிய நிலையில் துணியால் சுற்றப் பட்டு இருந்தது. அருகில் அவரது அக்காள் வாசுகி, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் சுதர்சனம் ஆகியோர் இருந்தனர்.
இவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் உடல்நிலை பாதித்த அன்னைஇந்திரா சில தினங்களுக்கு முன் இறந்ததாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தினமும் பிரார்த்தனை செய்துவந்ததாகவும் தெரிவித்தனர். இது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறந்து சில தினங்கள் ஆன நிலையில் உடல் அழுகியிருந்ததால், அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago