மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் வாசுகி தெருவில் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த தேவி(26) என்ற பெண் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கி ளில் சென்ற இரு சிறுவர்கள் தேவியின் பர்ஸை பறித்துக் கொண்டு தப்பினர். அதில் இரண் டரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ.2,500 இருந்ததாக அவனி யாபுரம் காவல் நிலையத்தில் தேவி புகார் செய்தார்.
போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழிப்பறி செய்த இரு சிறுவர் களைப் பிடித்தனர். விசாரணை யில், அவர்கள் மதுரை வாழைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த வர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்த போலீஸார், தங்கச் சங்கிலி, ரூ.2,500-ஐ கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago