திமுக நடத்தும் மக்கள் சபை கூட்டத்துக்குப் பொதுமக்கள் கூடு வதைக் கண்டு அதிமுகவினர் பயப்படுகின்றனர் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரி வித்தார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் திண்டுக் கல்லில் பொதுமக்கள், வணிகர் கள் உள்ளிட்டவர்களை நேற்று மாலை சந்தித்து பேசினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமை வகித்தார்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, தேர்தல் அறிக்கை குழு உறுப்பி னர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தி யூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில் குமார், ஆண்டிஅம்பலம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வணிகர்கள், தொழில் துறையினர், தோல் வர்த்தகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
பின்னர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மக்கள் சபை கூட்டங்களை நடத்தினோம். இந்த முறை அதேபோல் நான்கு மடங்கு அதிகமான கிராமங்களில் மக்கள் சபைக் கூட்டத்தை நடத்துகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் அதிகம் பேர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதைக் கண்டு அதிமுகவினர் பயப்படுகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago