சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை

By செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது.

சேலம் மாநகரம், தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூர் அணைமடுவு, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் சங்ககிரி, எடப்பாடி, காடையாம்பட்டி, மேட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் பகல் 11 மணி வரை மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நேற்று பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ஊத்தங்கரை 13.60, போச்சம்பள்ளி 10.20, ராயக்கோட்டை 10, பாரூர் 9.60, தேன் கனிக்கோட்டை 9, ஏற்காடு 6.8, மேட்டூர் 8.8, ஆத்தூர் 4.4, கிருஷ்ணகிரி 6.40, சூளகிரி 5, ஓசூர் 4, நெடுங்கல் 3, பெனுகொண்டாபுரம் 2.10 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்