கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் -2 தொழிற்பேட்டையில் திசு வளர்ப்பு முறையில் முள்ளில்லா மூங்கில் நாற்றுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதனை புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடிய திசு வளர்ப்பில் உருவான முள்ளில்லாத மூங்கில் பயிரை ஓசூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புது ரக முள்ளில்லாத மூங்கில் பயிரிட்டால் விவசாயிகளுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். இயற்கை எத்தனால் தயாரித்தல், நெசவுத் தொழில், வீடுகள் கட்ட இந்த மூங்கில் பயன்படுகிறது. இது இரும்பை விட பல மடங்கு உறுதியானது. மூங்கில் மரம் கார்பன்டை ஆக்ஸடை எடுத்துக் கொண்டு அதிகமான ஆக்சிஜனை வெளியிட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கக்கூடியது.
ஆகவே முள்ளில்லாத மூங்கில் வளர்ப்பு என்ற புதிய முயற்சியை அரசுகளும், விவசாயிகளும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago