திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணப்பாறைக்கு நேற்று வருகை தந்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மணப்பாறை காமராஜர் சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.பால்சாமி, பொருளாளர் வைகோ பழனிசாமி, மகளிரணி அமைப்பாளர் ரேணுகாதேவி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராஜ், நகரச் செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago